மூவரின் உயிருக்கு ஆபத்தாக மாறிய மின்சார தூண்!
மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று மின்சார ஊழியர்களே காயமடைந்துள்ளனர்.
குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் ஒருவர் மின் கம்பத்தின் மேல் நின்று மின் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, அந்த தூணின் நடுப்பகுதி உடைந்து தரையில் விழுந்ததுள்ளது.
தரமற்ற மின்சார தூண்களை பயன்படுத்துவதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri