இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் நியமனம்
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக ஷானன் கோவ்லின் (Shannon Cowlin) இன்று (09.2.2026) கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றிய 13 ஆண்டுகள் உட்பட, கோவ்லின் 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியாவார்.
வலுசக்தி, காலநிலை, சுற்றுச்சூழல், காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் உணவு-நீர் ஆகிய துறைகளில் முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை விடயங்களில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி
அவர் 2023 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மங்கோலியாவுக்கான வதிவிடப் பிரதிநிதித்துவத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கு முன்னர், அமெரிக்காவின் தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆய்வகத்தில் மேலாளராகப் பணியாற்றிய அவர், அங்கிருந்து அமெரிக்கா-இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய வலுசக்தி ஒத்துழைப்பு முயற்சிகளை வழிநடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri