சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்
சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இன்று (05.09.2026) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தள பிரச்சாரம்
சிறைச்சாலைக்குள் திட்டமிட்டுச் சலசலப்பை அல்லது கலவரத்தை உருவாக்கி நாமல் ராஜபக்சவைக் கொலை செய்வதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட முன்னரும் இவ்வாறானதொரு பின்னணியே நிலவியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.