பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்.. வெளிநாடொன்றில் அவசரநிலை பிரகடனம்
எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல் நினோ
எல் நினோ காரணமாக இந்த ஆண்டில் சீனாவைப் பாதிக்கும் ஏழாவது சூறாவளியாகப் பெயரிடப்பட்டுள்ள 'சௌடல்' (Soudal) சூறாவளி, அந்நாட்டைக் கடுமையாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வீடுகளுக்குத் தண்ணீர் லொறிகள் (bowsers) மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது. உலகைப் பாதித்துள்ள எல் நினோ நிகழ்வு இலங்கையையும் பாதித்துள்ளது.