கொழும்பில் பாதாள உலக குழுவின் வெறியாட்டம் - தவறுதலாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தந்தை
கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தையிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான சுனில் பெர்னாண்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு
கொஸ் மல்லி எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளரையே இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் தவறுதலாக அவரின் தந்தை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு தாக்குதல்தாரிகள், கைப்பாப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20