கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய பதிவு..

Namal Rajapaksa Crime Law and Order
By Shadhu Shanker Sep 04, 2026 04:38 PM GMT
Report

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில்,

அரசியல் பழிவாங்கல்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.

 மாபெரும் மக்கள் பேரணி

அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.

கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய பதிவு.. | Namal Arrest After Fb Post

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது. அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.

இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்

இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்

நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐ.தே.க கண்டன அறிக்கை!

நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐ.தே.க கண்டன அறிக்கை!

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US