இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ச தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகளுக்காக இவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.
நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.
இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..