6ஆம் வகுப்பு சேர்க்கை - இணையவழி விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான இணையவழி விண்ணப்பச் செயல்முறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வரும் வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி 2026 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பாடசாலை இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி அமைப்பின் மூலமாகவே பெறப்படும் என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இணையவழி அமைப்பு முறை
இதன்படி, அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் இந்த இணையவழி அமைப்பு முறை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது .

அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப திகதிகள், கடைசி நாள் மற்றும் அதற்கான விரிவான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.