நாமலின் கைதில் பொலிஸாரிடம் குழப்பம் விளைவித்த ஆதரவாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாமல் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.