கொடுத்த காசுக்கு மேல் கூவிய நாமலின் ஆதரவாளர்கள் - அநுர செய்வது அரசியல் பழிவாங்கலா!
நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, நாமலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முன் கூடிய ஆதரவாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு அவ்வாறு நடந்து கொண்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர், சிதம்பரம் கருணாநிதி குறிப்பிடுகின்றார்.
அவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் குறிப்பிட்டதாவது,