ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிக கொடுமையானது! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவலை (VIDEO)
உக்ரைனில் 6 ஆவது நாளாக ரஷ்ய இராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதோடு மட்டுமல்லாமல், உக்ரைன் கீவ் நகரை நோக்கி 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ரஷ்ய போர் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 24ஆம் திகதி முதல் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
தீவிரமாகியுள்ள உக்ரைன் ,ரஷ்ய போர் 3 ஆம் உலகப்போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் உலகளாவிய ரீதியில் மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனை பிறப்பிடமாக கொண்ட கடந்த 9 வருடங்களாக இலங்கையில் வாழும் மக்கள் உக்ரைன் - ரஷ்ய போரின் தற்போதய நிலைமை குறித்து நாம் வினவினோம்!
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிக கொடுமையானது எனவும், தொடர்ந்து கொடூரமாக தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்து வருவதாகவும், இதனால் உக்ரைனில் வாழும் தமது உறவுகள் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், உடனடியாக இந்த யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள உக்ரைனிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
