சர்ச்சைகளுக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

Tamils Ampara Sri Lanka
By Farook Sihan Jan 20, 2025 02:26 AM GMT
Report

அம்பாறை - கல்முனையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் நேற்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்

மாநகர சபையின் உத்தரவு 

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் | Thiruvalluvar Statue Removed Amid Rain

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் ஞயிற்றுக்கிழமை(19) கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு வெள்ளிக்கிழமை(17) "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

வாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த

வாடகை வீட்டிற்கு செல்லும் மகிந்த

தடையுத்தரவு

ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர்.

தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் | Thiruvalluvar Statue Removed Amid Rain

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அநுரவின் அடுத்த விஜயம்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அநுரவின் அடுத்த விஜயம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US