குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை(21) ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபைக்கு சுமார் 800,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டம்
அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபைக்கு 3.4 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.
அதில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற தகுதியானவர்களாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |