ஹார்மூஸ் நீரிணையில் தொடரும் பதற்ற நிலை: சில மணி நேர இடைவெளியில் குறிவைக்கப்பட்ட 3 கப்பல்கள்
ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 3 நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது சில மணி நேர இடைவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ஈரானும் அதற்கு பதிலடி வழங்கி வருகிறது.
கப்பல்கள் மீது தாக்குதல்
இந்த போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியது. அதுமட்டுமல்லாமல் ஹார்மூஸ் நீரிணையில் எந்தக் கப்பல் வந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்தது.

இந்த நிலையில் சில நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிலும் தாய்லாந்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் பயணித்த 23 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறதாக தெரியவருகிறது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam