மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை! இலங்கைக்கு மேலும் பாதிப்பு..
உலக சந்தையில் மீண்டும் கச்சாய் எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்றையதினம்(12/03/2026) காலை வர்த்தக நடவடிக்கைகளின் ஆரம்பத்தின் போது ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி பதிவாகியுள்ளது.
மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கடந்த 09ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக கச்சாய் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரித்து 110 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்தது.
மீண்டும் அதிகரிப்பு
எனினும், மறுதினம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பிற்கு அமைய கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் சடுதியாக குறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றையதினமும் விலை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்தது.
எனினும், இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் ஆரம்பத்தின் போதே கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இராணுவ நிலைமை உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்படுத்திய கடுமையான தாக்கமே இதற்கு முக்கிய காரணமாகும்.
சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகளான G7 நாடுகள் நேற்று ஒருமனதாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்புக்களை உலக சந்தையில் வெளியிட ஒப்புக்கொண்ட போதிலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் இந்த தாக்கங்கள் உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு புறம்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. மத்தியக் கிழக்கு போர் நிலைமைகள் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருளின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அந்த விலையை சமப்படுத்தும் நோக்கில் இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்த்தினால் அறிவிக்கப்பட்டது.
எனினும், உலக சந்தையில் எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் கடுமையான தாக்கங்களை செலுத்தக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam