பண்டோரா சர்ச்சை! - திருக்குமார் நடேசனை விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் (Thirukumaran Nadesan) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையத்திற்கு நாளை தினம் அழைக்கப்பட்டுள்ளார்.
கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) கணவர் திருக்குமார் நடேசனின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில், கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பண்டோரா ஆவணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவை அடுத்து திருக்குமார் நடேசனை விசாரணைக்கு அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு திருக்குமார் நடேசன் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்,
பண்டோரா ஆவணம் தொடர்பாக அவரது மற்றும் அவரது மனைவியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய ஒரு சுயாதீன ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, பண்டோரா ஆவணம் தொடர்பான அறிக்கைகளை பதிவு செய்ய திருக்குமார் நடேசன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி...
பெண்டோரா மோசடி விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் திருக்குமார் நடேசனிடமிருந்து ஜனாதிபதிக்கு சென்றுள்ள முக்கிய கடிதம்
“நாளொன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் 18 தலைமுறைகளின் சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை சேர்த்துள்ள நிரூபமா”
பெண்டோரா ஆவண விவகாரம் - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
