பண்டோரா மோசடி விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை
பண்டோரா மோசடிக்காரர்களை கண்டுபிடிக்க, சர்வதேச மட்ட விசாரணையை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முறையற்ற விதத்தில் நிதி சேகரித்தல், வரி செலுத்தாமை, பணச்சலவை உட்பட இரகசிய நிதிக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களை வெளிக்கொண்டு வரும் பண்டோரா பத்திரம் ஊடாக இலங்கையிலுள்ள சிலரின் நிதி பரிவர்தனை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இது தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டோரா பத்திரங்களின் மூலம் வெளிவந்துள்ள சொத்துக்கள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பல நாட்டுத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் இது தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் முடிவு செய்துள்ளன.
இதேவேளை, அத்தியாவசிய உணவுகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு வரிசையாக நின்றுகொண்டு அவதிப்படும் பொதுமக்களை நாடு பூராகவும் காணக்கூடியதாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.ஆசிரியர்கள் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலம் அவர்களது தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.
கொரோனா பேரழிவு காரணத்தால் பதின்மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதுடன், மருந்து மாபியா காரணத்தால் மேலும் பல்வேறுபட்ட நோயாளர்கள் வாழ்வுக்கும்,சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் வீழ்ச்சி நிலைமையிலேயே உள்ளது. இத்தகைய நேரத்தில் ஒரு பெரிய மோசடி தொடர்பான காரணங்கள் பண்டோரா பத்திரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, இந்த பெரும் மோசடியின் உண்மையான விடயங்களை நாடு அறிய வேண்டும்.
எனவே, பண்டோரா மோசடிக்காரர்களைத் தேடும் உண்மையான நடுநிலை,வெளிப்படைத் தன்மையுள்ள, சர்வதேச அங்கீகாரத்தை ஒத்த விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
