வெடுக்குநாறி மலையில் எவ்வித தடையுமின்றி இடம்பெற்ற மகா சிவராத்திரி வழிபாடுகள்
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதன்போது, எந்தவித குழப்பமுமின்றி மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், இம்முறை குறித்த பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு வழியமைத்து தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதன்படி, எந்தவித குழப்பமுமின்றி மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri