ட்ரம்ப் ஆட்சியில் நடந்த மோசடி - குற்றத்தை ஒப்புக் கொண்ட முக்கிய அதிகாரி
அமெரிக்காவின் தொற்றா நோய் தொடர்பான மூத்த நிபுணரான அந்தோனி பௌசியின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிதியுதவிகள் மற்றும் அது தொடர்பான அரசாங்கப் பகிரங்க ஆவணங்களை மறைப்பதற்குச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் அலர்ஜி மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய 78 வயதான டேவிட் மோரன்ஸ் என்பவரே, மேரிலாந்திலுள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து வருட சிறைத்தண்டனை
பொதுத்தகவல் சட்டங்களின் கீழ் கோரப்படும் ஆவணங்களை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், அரசாங்க உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளுக்குப் பதிலாகத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்தச் சதித்திட்டக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்படவுள்ளதுடன், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening