பல வருடங்களாக இலங்கை மக்களை மகிழ்வித்த ஒட்டகசிவிங்கி உயிரிழப்பு - இறக்கும் தருவாயில் செய்த சாதனை
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று(18.08.2026) இரவு உயிரிழந்ததாக இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுட்காலத்தை தாண்டி வாழ்ந்த ஒட்டகசிவிங்கி
மேற்படி அறிக்கையில்,
இறக்கும் தருவாயில் அந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஏறக்குறைய முப்பது வயது இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகள் ஆகும், மேலும் நன்கு நிர்வகிக்கப்படும் விலங்கியல் பூங்கா சூழலில் அவை நீண்ட காலம் வாழக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

அதன்படி, இந்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட காலம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பு இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தவொரு சிறப்பு மருத்துவ நிலையும் இருந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை.
மரணத்திற்கான காரணம்
மேலும் விலங்கின் வயதாவதால் ஏற்பட்ட ஒரு இயற்கையான நிலையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று(19) நடத்தப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விலங்கு நலன், மரபணுப் பன்மையை பேணுதல் மற்றும் விலங்குப் பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுடன் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் விலங்குப் பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
YOU MAY LIKE THIS..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan