பெரும் சர்ச்சைக்கு மத்தியில் திருக்குமார் நடேசனிடமிருந்து ஜனாதிபதிக்கு சென்றுள்ள முக்கிய கடிதம்
இலங்கையில் தற்போது பெண்டோரா ஆவண விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பெண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசன் (Thirukkumaran Nadesan) ஆகியோரின் பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவரும் நிலையில் இந்த விவகாரமானது தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பெண்டோரா ஆவணத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தானும் தனது மனைவியும் எந்தவொரு மோசடி வேலைகளிலும் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச? சிங்கள ஊடகம் தகவல்
நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்
பெண்டோரா ஆவணங்களால் சிக்கிய நிரூபமா ராஜபக்ஷ - அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
பெண்டோரா ஆவண விவகாரம் - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
“நாளொன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் 18 தலைமுறைகளின் சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை சேர்த்துள்ள நிரூபமா”

