பெண்டோரா ஆவணங்களால் சிக்கிய நிரூபமா ராஜபக்ஷ - அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
பெண்டோரா ஆவணங்களில், முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த இலங்கையின் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம், நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை பற்றி நேற்று இரவு கூடிய அமைச்சரவை விவாதித்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்டோரா பேப்பர்களில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்ட இரகசிய ஆவணங்களின்படி, நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பாரிய வெளிநாட்டு சொத்துக்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி...
நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
