யாழ். திருக்குடும்ப கன்னியர் மட கூடைப்பந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, நேற்றையதினம் (16.10.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவில் இறுதி போட்டியில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடம் அணியுடன் மோதிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் அணி 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.
பயிற்றுவிப்பாளர்
இதன் மூலம் வடக்கு மாகாண பாடசாலை ஒன்று 17 வயது பிரிவில் முதல்முறையாக தேசிய ரீதியில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட தொடராக இது பதிவாகியது.
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு தனுஷ் ராஜசோபனா பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
