மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் மோசமான போர் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு
பிராந்திய வலயத்தில் குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதனை கருத்திற் கொண்டு அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அந்தந்த நாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் அந்தந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்கள்
இதற்கமைய, மத்திய கிழக்கில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் உறவினர்கள், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812/ 011 – 7711194 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 48 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
