போரிலிருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரான்ஸ்
உக்ரைன் - ரஷ்ய போரிலிருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் விசா கிடைத்துள்ளது.
தப்பியோடிய ஆறு ரஷ்ய வீரர்களும் பிரான்ஸ் நாட்டில் அரசியல் புகலிடம் கோரியதையடுத்தே அவர்களுக்கு அந்நாட்டின் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பிபோடிய ரஷ்ய வீரர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடொன்று விசா வழங்குவது இதுவே முதல் முறை என மனித உரிமை ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியும் சுதந்திரமும்
மேலும், இந்த செயற்பாடானது மேலும் பல வீரர்கள் போரிலிருந்து தப்பிவர வழிவகுக்கும் என கருதப்படுகின்றது.
இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் நுழைந்தவுடன் அமைதியையும் சுதந்திரத்தையும் தன்னால் உணர முடிந்ததாக விசாவை பெற்ற ரஷ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |