ஆடைகளை கிழித்து என்னை கொடுமைப்படுத்தினர் - பெண்ணொருவர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்து இந்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது ஆடைகளை கிழித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். இதுவா சட்டம்? இதுவா நீதி? நியாயத்திற்காக போராடினால் இப்படியா செய்வார்கள்?
நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என நீதிமன்றம் கூறியது. எனினும் பேருந்து ஒன்றில் எங்களை கடத்தி செல்வது போன்று கொண்டு செல்கின்றார்கள். எங்கு கொண்டு செல்கின்றார்கள் என தெரியவில்லை. இது எங்கு சென்று முடியப்போகின்றதென எங்களுக்கு தெரியவில்லை.
ஆடைகளை கிழத்தார்கள். அமைச்சர் சரத் வீரசேகர எனக்கு ஆடை கொண்டு வந்து தாருங்கள்” என அவர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - பெருமளவானோர் அதிரடியாக கைது
கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக பதற்ற நிலை! களத்தில் அதிரடிப்படையினர்





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
