கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக பதற்ற நிலை! களத்தில் அதிரடிப்படையினர்
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று மாலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 33 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 25000 ரூபா ரொக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டமையை அடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கலகம் தடுக்கும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிந்திய தகவலின்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 15 பேர் விசேட தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.