சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு
சட்டத் துறையின் தொழில்முறை நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரை, உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் டபிள்யூ.எஸ்.எல்.எஸ். பாலிபன என்பவர் தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2006, மார்ச் 01, மற்றும் 2007, பெப்ரவரி 15, ஆகிய திகதிகளில், ஒரு வழக்கில் செயற்பட பிரதிவாதியான சட்டத்தரணி கோரப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரதிவாதியான அவருக்கு முன்பணமாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.
நீண்ட விசாரணை
இருப்பினும், பிரதிவாதியான சட்டத்தரணி, வாக்குறுதியளித்தபடி சேவைகளை வழங்கத் தவறியதால், மனுதாரர், 2008இல் அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, பிரதிவாதியின் நடவடிக்கைகள் சட்டத் துறையின் நேர்மை மற்றும் நற்பெயருக்கு கடுமையான தீங்கு விளைவித்ததாக முடிவு செய்தது.
அத்துடன், சட்டத்தரணிகள் பட்டியலிலிருந்து அவரின் பெயரை நீக்குமாறு உயர் நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
