ஒன்லைன் வர்த்தகத்தில் கோடி ரூபா நஷ்டம் : இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு
ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபா பணத்தை இழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(11.10.2025) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கட்டுவன் பகுதியை சேர்ந்த தங்கராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும் வர்த்தகத்தில் நஷ்டம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் அமெரிக்க கம்பனி ஒன்றில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த வர்த்தகமானது நேற்றிரவு சரிவடைந்துள்ளதால் அவருக்கு ஒருகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மன விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இதற்கு முன்னரும் இவர் ஒருதடவை பல இலட்சம் ரூபா நஷ்டத்தை சந்தித்த நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து அவரை மீட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
