மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! ஈரானிலிருந்து வெளியேறுமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவிப்பு
ஈரானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மக்கள் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
வன்முறை உருவாக வாய்ப்புகள்
இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானில் ஏற்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்படகூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தீவிர போராட்டங்கள்
மத்திய கிழக்கு நாடான ஈரானில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, ஈரானை எச்சரித்து வருகின்றது.
இந்நிலையில், குறித்த போராட்டங்களில் சுமார் 500 பேர் இறந்துள்ளதாகவும் ஈரானிய அரச ஊடகம் நிலைமையை சாதாரணமாக காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri