ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி: இந்தியாவும் பாதிப்பு
ஈரானுடன் வர்த்தக தொடர்புகள் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25வீதம் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் அவர் நேற்றைய தினம்(12.01.2026) தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
சுங்கவரி அறவீடு
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது வாரமாக நீடிக்கும் நிலையில், டெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதன்படி, “ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும், அமெரிக்காவுடன் செய்யும் அனைத்து வணிகங்களுக்கும் 25வீதம் சுங்கவரி செலுத்த வேண்டும்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால் “ஈரானுடன் வணிகம் செய்வது” என்பதற்கான தெளிவான வரையறை வழங்கப்படவில்லை. ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக சீனா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகியன செயற்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் இராணுவ தலையீடு உட்பட அனைத்து நடவடிக்கைகளும், பரிசீலனையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரானில் நாணய மதிப்பு வீழ்ச்சியால் கடந்த டிசம்பரில் தொடங்கிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. எனினும் இணைய தடை காரணமாக நிலவரங்களை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri