ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் ஈராக் விடுத்துள்ள கோரிக்கை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான அண்மைய பதற்ற நிலைமை குறித்து ஈராக் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த மோதல் உயிரிழப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகவும் ஈராக் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ராஜதந்திர வழிகளையும் உரையாடலையும் பயன்படுத்த வேண்டும் எனுவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகும் உறவை மதித்து நிலைமையை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சர்வதேச சட்டங்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனக் கொள்கைகளும் பின்பற்றப்பட்டு, மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஈராக் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam