மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீதிக்கு இறங்கிய வெற்றிலைக்கேணி மக்கள்
மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மன்னார் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சமாதானமான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் வணக்கத்திற்குரிய பங்கு தந்தையர்கள் மீதும் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று(28.09.2025) இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம்
மன்னார் மக்களுக்கு பாதிப்பாக அமையக்கூடிய காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது அரசு அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதும், அருட் தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவழிக்கும் முகமாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெற்றிலைக்கேணி பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த போராட்டம் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அநுர அரசே பொலிசாரை ஏவி அடக்கு முறையை திணிக்காதே, அநுர அரசே கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்து,நிறுத்து நிறுத்து அருட் பணியாளர்களுக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து,எமக்காக போராடும் அருட்பணியாளர்களை ஏன் தாக்கினாய், எம் மண்ணை அழித்து எம் சந்ததியை அழிக்கலாம் என்று திட்டம் போடாதே, அருட்பணியாளர்களை தாக்க பொலிசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






