நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம்(29.09.2025) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(29.09.2025) அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்த ஊடகவியலாளர்களுடனும் அர்ச்சுனா முரண்பட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் கடந்த 25ஆம் திகதி உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்
கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் கடந்த 22ஆம் திகதி விசாரித்தனர்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டார்.
இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
