வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதி வரை நிலுவைத் தொகை நிலுவையில் இருந்ததாகவும், எந்த நீடிப்பும் இல்லாமல் ஆறு மாதங்களில் நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான நடைமுறை
சில நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவதில் தவறிழைத்த நிறுவனங்கள் நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.
நிதி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், நிலுவைத் தொகையை வசூலிப்பதில் கடுமையான நடைமுறையை பின்பற்றுவதாகவும் வரி செலுத்தாத நிறுவனங்களில் மதுபான நிறுவனங்கள், விருந்தகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
