தீவிர அரசியல் களத்திலிருந்து விலகும் ராஜபக்சர்களின் வாரிசுகள்! ஒன்பது பிரிவுகளாக பிரிந்துள்ள ராஜபக்ச குடும்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக கட்சியின் அதிகாரம் ராஜபக்ச குடும்பத்தின் இரத்த உறவிலிருந்து பிரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல்வேறு பிரச்சார குழுக்களால் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச அரசியலில் களமிறங்குவதாகவும், அவரை பெண் சிங்கம் என்றும் கூறிவரும் நிலையில் இதன் மூலம் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்ப தலைமுறையின் 9 வாரிசுகள்
கடந்த காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட்ட சமல் ராஜபக்சவின் இரண்டு மகன்கள், மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்கள், கோட்டாபய ராஜபக்சவின் மகன் மற்றும் பசில் ராஜபக்சவின் மூன்று மகள்கள் ஆகியோர், ராஜபக்ச குடும்ப தலைமுறையின் 9 வாரிசுகளாக பார்க்கப்பட்டனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்சவை அரசியலில் முன்னிறுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக பிரச்சாரங்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களில், சிறிமா பண்டாரநாயக்கவை சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட்டு, "வரலாறு மீண்டும் நிகழ்கிறதா?" என்று பதிவிடப்பட்டு வருகின்றது.
அரசியலில் களமிறங்கும் பெண்
இந்நிலையில், ராஜபக்ச குடும்ப அரசியல் ஒன்பது பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளதாகவும், ராஜபக்சகர்களின் வாரிசுகள் அரசியல் களத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்த பின்னணியில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச அரசியலில் களமிறங்குவது குறித்த தகவல்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் நாமல் ராஜபக்சவோ அல்லது அவரின் தரப்பினரோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri