கைதினை தடுக்க கோட்டாபய தாக்கல் செய்த மேன்முறையீடு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மனு நிராகரிப்பு
இந்த வழக்கு இன்று (25) மகிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்படுதை தடுக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், மனுவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிர அரசியல் களத்திலிருந்து விலகும் ராஜபக்சர்களின் வாரிசுகள்! ஒன்பது பிரிவுகளாக பிரிந்துள்ள ராஜபக்ச குடும்பம்
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri