பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
களுத்துறை - பண்டாரகம, வெல்மில்ல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை கொடூரமாக தாக்கியதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி அதிபர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
முகத்தில் பலத்த காயங்கள்
அதிபர், தமது இரு கரங்களாலும் மாணவனின் முகத்தில் தொடர்ச்சியாக அறைந்துள்ளார்.

இதனால் முகத்தில் காயங்கள் ஏற்பட்டு, பற்கள் துலக்க முடியாத அளவுக்கு மாணவனுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாக தந்தை, தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாணவன் முதலில் வெத்தற மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.