இளவரசர் மற்றும் மனைவியின் மோசமான செயல்கள்.. ராஜ குடும்பத்துக்கு தலைகுனிவு!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ளஸின் இளைய சகோதரர் இளவரசர் அண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன் ஆகியோரின் மோசமான செயல்களால் ராஜ குடும்பத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமிகளையும் இளம் பெண்களையும் ஏமாற்றி அவர்களை கடத்தி தவறான தொழில்களில் ஈடுபட வைத்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் அண்ட்ரூ நட்பு பாராட்டியுள்ளார்.
எப்ஸ்டீனின் மாளிகையில் 18 வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவில் அண்ட்ரூ இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னரின் அதிரடி முடிவு
குறித்த பெண், தவறான முடிவெடுத்து உயிரிழந்தமையும் ராஜ குடும்பத்தை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருந்தது.

இதேவேளை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க சிறையிலிருந்து விடுதலையானதை கொண்டாடுவதற்காக அண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா, தன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றதும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இவ்வாறிருக்க, ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் 'Royal Lodge' என அழைக்கப்படும் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான, 30 அறைகள் கொண்ட மாளிகையில் தங்கியுள்ளனர்.

இதற்கு பிரித்தானிய மக்கள் எதிர்ப்பு வெளியிட, மன்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |