ட்ரம்பையே மிரள வைக்கும் கமேனியின் இரகசிய திட்டம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பதற்றநிலை

Donald Trump United States of America Middle East
By Sajithra Jan 30, 2026 08:49 PM GMT
Report

ஈரானை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில், ட்ரம்ப் தனது பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதற்கிடையில், அமெரிக்கா, ஈரானை தாக்கினால், கடும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய படைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாடு எச்சரித்துள்ளது. 

அதேநேரம், மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லா, ஹவுத்தியும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் என அறிவித்துள்ளன. 

இவ்வாறிருக்கையில், இருநாடுகளுக்கும் அதிகரித்து வரும் போர் பதற்றம், சர்வதேச ரீதியில் ஒரு அச்சத்தை எழுப்பியுள்ளதாக பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிடாவிட்டால்...ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிடாவிட்டால்...ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

உடன் பதிலடி

இந்நிலையில், அமெரிக்கா தாக்கினால், அதனை எதிர்கொள்ள ஈரான் வைத்துள்ள இரகசிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

ட்ரம்பையே மிரள வைக்கும் கமேனியின் இரகசிய திட்டம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பதற்றநிலை | Iran Secret Plans An Attack Ust Been Discussed

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், ஈரான் ஆயிரமாயிரம் அதிநவீன ட்ரோன்களை தங்களது இராணுவத்தில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த ட்ரோன்கள் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலுடனான மோதலில் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து அதிர்ச்சி அளித்தது.

அதேவேளையில், போர் ஆரம்பித்தால் தங்கள் நாடு பெருமளவு இழப்பை சந்திக்கும் என அஞ்சும் மத்திய கிழக்கில் உள்ள அண்டை நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்துகின்றன.

இதற்கிடையில், ட்ரம்பின் சொல்லாட்சியும், சமீபத்திய நாட்களில் ஈரானின் கடற்கரையில் அமெரிக்க இராணுவ தளவாடங்களை அசாதாரணமாக நிலைநிறுத்தியிருப்பதும், தாக்குதல்கள் உடனடியாக நிகழக்கூடும் என்பதைக் குறிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தராஜா எம்.பி கோரிக்கை

சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தராஜா எம்.பி கோரிக்கை

ஆயுதக் குவிப்பு.. 

ஈரானில் புதிய இராணுவக் குவிப்பு, ஈரான் மீதான உடனடி தாக்குதலைக் குறிக்கலாம், ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ட்ரம்பையே மிரள வைக்கும் கமேனியின் இரகசிய திட்டம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பதற்றநிலை | Iran Secret Plans An Attack Ust Been Discussed

ஈரான், கடந்த செவ்வாயன்று தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு சாத்தியமான போருக்கும் முழுமையாகத் தயாராக இருப்பதாகக் கூறியது, அதேநேரம், பிரச்சினைகளைத் தீர்க்க உரையாடலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வலியுறுத்தியது.

இதற்கிடையில், ஈரானில், அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளான, ஈரான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 போன்ற ஏவுகணைகளை வெளியிட்டு நிலைநிறுத்தியுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ட்ரம்பையே மிரள வைக்கும் கமேனியின் இரகசிய திட்டம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பதற்றநிலை | Iran Secret Plans An Attack Ust Been Discussed

அவை ஹைப்பர்சோனிக் (5 மேக் வேகத்திற்கு மேல் பயணிக்கும்) மற்றும் மறைந்து தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகின்றது, இதனால் அவற்றை இடைமறிப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், துல்லிய-வழிகாட்டும் ஏவுகணையான கெய்பர் ஷெகான், 1,450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஒரு திட எரிபொருள் ஏவுகணையாகும், இது அதன் உயர் துல்லியம் மற்றும் சூழ்ச்சி திறனுக்காக பெயர் பெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US