மீண்டும் போர் பதற்றம்: காசா மீது தாக்குதல் நடத்துமாறு நெத்தன்யாஹூ உத்தரவு
காசா பிராந்தியம் மீது உடனடியாக பலமான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க பாதுகாப்பு கலந்தாலோசனைகள் நிறைவடைந்ததனை தொடர்ந்து, பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பிரதமர் நெத்தன்யாஹுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
காசா சமாதான ஒப்பந்தத்தை ஹமாஸ் தெளிவாக மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
ஹமாஸ் போராளிகளினால், இஸ்ரேலுக்குத் அனுப்பப்பட்ட உடல் பாகங்கள், இன்னும் கணக்கில் இல்லாத 13 பயணயக் கைதிகள் எவருடையதும் அல்ல என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கயை மீறிச் செயற்பட்டு வருவதாக ஹமாஸ் போராளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பதுடன் தெற்கு காசாவில் மீட்கப்பட்ட ஒரு சிறை கைதியின் உடலை ஒப்படைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கட்டுப்பாட்டில் காணப்படும் மஞ்சள் கோட்டிற்கு கிழக்கே உள்ள பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக, ஒரு இஸ்ரேல் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இந்த “மஞ்சள் கோடு” என்பது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் காசா பகுதியில் இருந்து விலகிய எல்லையை குறிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.