ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த 30 இலட்சத்திற்கும் அதிக ஆவணங்கள்
பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சத்திற்கும் அதிக ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன
அமெரிக்க நீதித்துறை, பாலியல் குற்றவாளியான மறைந்த *ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)* தொடர்பான 30 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன 30 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 1,80,000 புகைப்படங்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
ஆய்வு நடவடிக்கை
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை மறைப்பதற்காக (Redaction) லட்சக்கணக்கான பக்கங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால், குறித்த ஆவணங்களை வெளியிடுவதில் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட சட்டத்தின் கீழ் இந்த ஆவணங்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களில் பெயர்கள் இடம்பெறுவதால் மட்டுமே அவர்கள் தவறு செய்ததாக அர்த்தமல்ல என்று நீதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளியான ஆவணகளில் இடம்பெற்றிருந்த பல முக்கிய நபர்கள் எப்ஸ்டீனுடனான தவறான தொடர்புகளை மறுத்துள்ளனர்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam