காலையில் தலையில் பொல்லால் தாக்கி ஞாபக மறதியை ஏற்படுத்த நேரிடும்! மகிந்தவின் கருத்துக்கு விமல் பதிலடி
அமைச்சர்கள் வெளியிட்ட பொய்யான செய்திகள் காரணமாகவே நாட்டிற்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமை நகைப்புக்குரியது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரதமர் கூறினாலும் வேறு யாராவது கூறினாலும் அது முட்டாள்த்தனமாக கருத்து என்றே கூற முடியும்.
அப்படியானால், எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய வணிக வங்கிகள் கடன் பத்திரங்களை வெளியிடாவிட்டால், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.
அந்நிய செலாவணி நெருக்கடியோ, எரிபொருள் நெருக்கடியோ இல்லை எனக் கூறி மனதை தேற்றிக்கொண்டு இரவு தூங்க செல்லலாம் என நினைத்தால், மறுநாள் காலையில் தலையில் பொல்லால் தாக்கி ஞாபக மறதியை ஏற்படுத்த நேரிடும் எனவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 28 நிமிடங்கள் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri