பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினை
பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதிகளின் காரணமாக குழந்தைப் பராமரிப்பை அணுகுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
பெற்றோர்கள், 30 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்பைப் பெற முடியாது என புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதி எடுத்துரைக்கின்றது.
மேலும், 15 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்பை வழங்க முடியும் எனவும் குறித்த விதியின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
வறுமை நிலை
எனினும், இது போதாது என பெற்றோர் வாதாடி வருகின்றனர். இந்த புதிய விதிகளால் சில பெற்றோர்கள் குழந்தையை பராமரிப்பதற்காக வீட்டிலேயே நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனால், அவர்களின் வேலை வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு சிலர் வேலைகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது சுமார் 71,000 புலம்பெயர்ந்த குடும்பங்களை வறுமை நிலைக்கு தள்ளுவதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
இதனால், பல குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |