லொத்தர் சீட்டு அச்சிடுவதில் பெரும் சிக்கல்
கொழும்பிற்கு வெளியில் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் லொத்தர் சீட்டுகளில் கணிசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷான் மரம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது, லொத்தர் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான காகிதத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள் என கிருஷான் மரம்பகே குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக லொத்தர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப லொத்தர்களை வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், லொத்தர் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லொத்தர் வியாபாரிகளின் பல பிரச்சினைகளை குறைத்து லொத்தர் கொள்வனவு செய்பவர்கள் தமது பணியை நியாயமான முறையில் செய்யக்கூடிய வகையில் லொத்தர் விநியோகஸ்தர்கள் பெறும் தரகு பணத்தை மேலும் அதிகரிக்குமாறு நிதியமைச்சிடம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.