திருக்கோவில் சம்பவம்! பொலிஸ் சார்ஜன் வழங்கிய வாக்கு மூலம்
தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்ததனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ் சார்ஜன் ரவீந்து குமார வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 24 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 4 பொலிஸார் உயிரிழந்தனர்.
இந் நிலையில் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அபாலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 பேரில் இருவர் சிகிச்சை பெற்று வைத்திசாலையில் இருந்து வெளியேறியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடது பக்க தோல் பட்டை ஊடாக குண்டு பாய்ந்ததில் அவரின் கை இயங்காத நிலையடைந்துள்ளதுடன் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மேலும், திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம் ஒன்றை கடந்த 26 திகதி மேற்கொண்டு சம்பவம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கட்டளையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! - பலி எண்ணிக்கை நான்காக உயர்வு (Video)
திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தாக்குதல்: உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் நல்லடக்கம்(Photos)
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்