திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! - பலி எண்ணிக்கை நான்காக உயர்வு (Video)
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன், விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்.....
நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!காரணம் வெளியானது
அம்பாறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் வெளியான தகவல்