மத்திய கிழக்கு போரின் தாக்கம் குறித்து மகிந்த வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழல் நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ மங்கள விகாரையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது ஒரு சர்வதேச போர் நடந்து வருகிறது. இந்தப் போர்கள் சிறிது காலம் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலத்திற்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என ஊடகவியலாளர் ஒருவர் மகிந்தவிடம் வினவியுள்ளார்.
இலங்கைக்கு பாதிப்பு
நாட்டிற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் ஒரு பிரச்சனை இருக்கும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மகிந்த மறுத்துள்ளார்.
இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனை விட நாட்டு மக்கள் நன்கு அறிந்தவர்கள் என மகிந்த பதிலளித்துள்ளார்.
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam