ஈரானிய இராணுவ விமானங்களை தாக்கி அழித்த அமெரிக்கா! பரபரப்பு காட்சிகள் வெளியாகின.. VIDEO
தென்கிழக்கு ஈரானின் - கெர்மனில் உள்ள விமான நிலையத்தில் வைத்து மூன்று ஈரானிய இராணுவ விமானங்களை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.
இது தொடர்பான காணொளியை அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, இலக்கு வைக்கப்பட்ட விமானங்களுள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட C-130 போக்குவரத்து விமானம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட P-3 கண்காணிப்பு விமானம் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Il-76 சரக்கு விமானம் ஆகியவை அடங்கும்.
தாக்குதல்
ஒவ்வொரு விமானமும் குறைந்தது ஒரு முறையாவது தாக்கப்பட்டதையும், பின்னர் மூன்று விமானங்களும் ஓடுபாதையில் எரிவதையும் காணொளி காட்சிகள் காட்டுகின்றன.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தன்னுடைய எக்ஸ் பதிவில்,
ஈரானிய ஆட்சியின் விமான சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அமெரிக்கப் படைகள் ஈரானிய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், அந்த அச்சுறுத்தல்களை முறியடித்து வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
The Iranian regime is losing air capability day by day. U.S. forces aren’t just defending against Iranian threats, we are methodically dismantling them. pic.twitter.com/CrJj2nFtHB
— U.S. Central Command (@CENTCOM) March 12, 2026
ஈரானிய விமானப்படையில் தற்போது உள்ள பல அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர், இரு நாடுகளும் உறவுகளைத் துண்டிப்பதற்கு முன்பு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவின் தடைகள் காரணமாக, ஈரான் இந்த பழைய விமானங்களை பராமரிப்பதிலும் இயக்குவதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.
2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்! கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் - தீவிரமடையும் கள நிலவரம்..
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam