யாழில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளுக்குள் விலை மதிப்பீட்டு அதிகாரிகள்!
வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளுக்குள் விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்றையதினம்(04.11.2026) சென்றிருப்பது மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகிறதா என வலி வடக்கு நில விடுவிப்பு போராட்ட குழுக்கள் சந்தேகம் வெளியிட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத வலி வடக்கு நில விடுவிப்புக்காக போராடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில் .விலை மதிப்பீட்டு அதிகாரிகள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் சென்று பார்வையிட்டமை எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அனுர தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வர முன் மக்களின் காணி மக்களுக்கு என கூறி வந்தது.
சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கை
ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கடக்கின்ற நிலையில் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.

வலி சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் பாதுகாப்பு படைகளிடம் உள்ள நிலையில் அண்மையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான காணியை மட்டும் விடுவித்தார்கள்.
இந்நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டமை எங்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.
விலை மதிப்பீடு
மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறும் ஆட்சியாளர்கள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அவர்களின் சம்மதம் இன்றி அவ்வாறு விலை மதிப்பீட்டு அதிகாரிகளை அனுப்ப முடியும்.

விலை மதிப்பீட்டு அதிகாரிகள் எமது காணிகளை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக விலைமதிப்பீட்டினை மேற்கொள்வதற்கவே வந்திருக்கிறார்கள் என சந்தேகிக்கிறோம்.
ஆகவே எமது காணிகளை யாருக்கும் வழங்குவதற்கு நாம் போராடவில்லை எமது காணிகள் எமக்கு வேண்டுமே தவிர இழப்பீட்டை நாம் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.